உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த AvengersInfinityWar படத்தின் திரை விமர்சனம்

உலகமே அழியப்போகும் அதை எதிர்த்து போராடுவது தான் சூப்பர் ஹீரோக்களில் வேலை, இது தான் காலம் காலமாக சூப்பர் ஹீரோ படங்களில் காலம் காலமாக தொண்டு செய்து வருவது.

இந்த நிலையில் சமீபத்தில் உலகமே எதிர்ப்பார்த்த அவெஞ்சர்ஸ் படம் திரைக்கு வந்துவிட்டது. இப்படம் ரசிகர்களை செம்ம சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சரி கதை என்ன என்று பார்ப்போம்.

ஆறு இன்ஃபினிட்டி கற்கள் கிடைத்தால், உலகை ஒரு நொடியில் பாதியாக அழிக்கும் வல்லமை படைத்த சூப்பர் வில்லன் தேனோஸ். வெவ்வேறு உலகங்கள், மனிதர்களிடம் புதைந்து கிடக்கும் அந்தக் கற்களை எடுக்க வேண்டும் என்ற டாஸ்க் தேனோஸுக்கு.

தேனோஸை அழித்து உலகைக் காக்க வேண்டும் என்ற டாஸ்க் வழக்கம் போல், சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ்க்கு. யார் இறுதியில் வெல்கிறார்கள் என்பதே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்.

படத்தின் மிகப்பெரும் பலமே தோனஸ் தான் மார்வலில் இதுவரை வந்த படங்களிலேயே சிறந்த வில்லன் தோனஸ் தான், படத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நமது சூப்பர் ஹீரோக்கள் அனைத்தயும் மறக்க அடித்து விடுகின்றனர்,

இந்த சம்மருக்கு அவெஞ்சர்ஸ் 3 செம்ம விருந்து வசூல் வேட்டை தான்,