ஏமாற்றியவர்களுக்கு செம்ம பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் நம்பிக்க நட்சத்திரம். இவர் படம் நடித்தாலே அது தரமான படமாக தான் இருக்கும் என நம்பப்படுகின்றது.

பிரபலங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் என எல்லாவற்றிலும் இருப்பர். சிலர் இன்ஸ்டகிராமில் மட்டும் இருக்கிறார், குறிப்பாக அப்படி சொல்ல வேண்டும் என்றால் சியான் விக்ரம், விஜய் சேதுபதி போன்றோர் ஒரே ஒரு சமூக வலைதளம் மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சில நாட்களாக விக்ரம் பேஸ்புக்கில் இருப்பதாகவும், விஜய் சேதுபதி டுவிட்டரில் இருப்பதாகவும் பதிவுகள் வருகின்றன. அதனை பார்த்த விக்ரம் ரசிகர்களுக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

இந்த நேரத்தில் விஜய் சேதுபதி போலி நபர்களை அழிக்க அவரே தற்போது புதிய டுவிட்டர் பக்கம் திறந்துள்ளார். அதனை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.