துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்

விஜய் சினிம கெரியரிலேயே செம்ம படம் என்றால் துப்பாக்கி தான். இப்படத்தின் மூலம் விஜய்க்கு பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உருவாகியது.

இந்த நிலையில் துப்பாக்கி படத்தின் கதையை முதலில் முருகதாஸ் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரிடம் தான் சொன்னாராம்.

அவரும் நடிக்க சம்மதிக்க பிறகு ஒரு சில காரணங்களால் அந்த படப்பிடிப்பு தள்ளிப்போனதாம், அந்த கேப்பில் தான் முருகதாஸிடம் விஜய் கதை கேட்டுள்ளார்.

விஜய்க்கு துப்பாக்கி கதையே மிகவும் பிடித்துப்போக, அக்‌ஷய்குமாரிடம் முருகதாஸ் விஜய்யை வைத்து நான் தமிழில் இப்படத்தை எடுக்கவா? என்று கேட்டுள்ளார்.

அக்‌ஷய் குமாரும் உங்கள் இஷ்டம், தற்போதைக்கு நான் பிஸி நீங்கள் முடித்துவிட்டே வாருங்கள் என்று கூற, முதலில் துப்பாக்கி எடுத்த பிறகு சில மாதங்கள் கழித்து ஹிந்தியில் துப்பாக்கி ரீமேக்காக ஹாலிடே படத்தை முருகதாஸ் தொடங்கியுள்ளார்.

ஒருவேளை அக்‌ஷய் குமார் அந்த நேரத்தில் கால்ஷிட் கொடுத்திருந்தார் துப்பாக்கி முதலில் அவர் தான் நடித்திருப்பார்.