தல என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா – அஜித் ஸ்பெஷல்

உலகமே கொண்டாடும் ஈடு இணையற்ற தலைவர்கல் ஒரு சிலர், அவருடன் தான் அஜித்தை ஒப்பிடவில்லை, ஆனால் சினிமா துறையில் தனகென்று ஒரு பிரமாண்ட கூட்டத்த சேர்ப்பது என்பது சாதரண விஷயமே இல்லை.

அஜித் ஒரு மெக்கானிக்காக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கார்மெண்ட்ஸ் கம்பெனி, விளமர மாடல் என மெல்ல சினிமாவின் கதவுகளை தட்டினார், அந்த கதவு அவருக்கு எளிதில் திறந்தாலும் வெற்றி என்ற அறை அவருக்கு ஓபனாக சில வருடங்கல் ஆனது.

பல தோல்விகள், உடல் அளவில் பாதிப்புக்கள் அஜித் கதை முடிந்தது, அவ்வளவு தான் என அனைவரும் பேசி வந்த நிலையில் பீனிக்ஸ் பறவை போல் அதை முறியடித்து வெற்றி கொடி நாட்டியவர் தான் அஜித். இன்று அவரின் 47வது பிறந்தநாள், திரைக்கடல் சார்பாக வாழ்த்துக்கள் தல.