அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர், இவரை எப்போதும் தமிழர் இல்லை ஆந்திராவை சேர்ந்தவர் என ஒரு சிலர் தாக்குவது உண்டு.
ஆனால், அஜித் தமிழர்களின் பிரச்சனை அனைத்திற்கும் போராட்டம் என்ற முறையில் குரல் கொடுத்துள்ளார், தற்போது காவேரிக்கு ஆதரவாக திரையுலகத்தினர் மௌனப்போராட்டம் நடத்தினர்.
இதில் பலரும் அஜித் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்த்தார்கள், இன்று நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் பங்கேற்றனர்.
விஜய், சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர். ஆனால் அஜித் வருவார் என மிகவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
பொது விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் இதுபோன்ற நல்ல விசயங்களுக்கு போரட்டங்கள் நடைபெற்ற போது முன்பெல்லாம் கலந்துகொண்டார். ஆனால் தற்போது அவர் வராதது எதிர்பாராத ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் கோபமான ரசிகர் ஒருவர், தமிழர்களுக்காக அவர் வரமுடியாமல் போய்விட்டதா திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கிமீ அவரால் பயணம் செய்யமுடியாதா அவர் வீட்டை விட்டு வரவேமாட்டாரா என கேள்வி கேட்டு டிவிட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமின்றி பல ரசிகர்கள் அஜித் தமிழர்களை மதிக்கவில்லை என்ற ரேஞ்சில் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.