உதவி இயக்குனருக்கு அஜித் செய்த மிகப்பெரும் உதவி – முன்னணி இயக்குனர் கூறிய தகவல்

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட, அவர் என்ன சொன்னாலும் கேட்க பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

மே1 இன்று அவருடைய பிறந்தநாள், ரசிகர்கள் ஒருபக்கம் ஏகபோகமா கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குனர் சுசீந்திரன் அவரை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலையும் கூறியுள்ளார்.

என்னுடைய உதவி இயக்குனருக்கு ஆபரேஷனுக்கு 3 லட்சம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அஜித்தை ஜனா படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன். அப்போது உதவி இயக்குனரின் நிலைமையை கூற உடனே அவர் உதவி செய்தார் என்று கூறியுள்ளார். இதோ அவர் டுவிட்டரில் போட்ட பதிவு…