அஜித் எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கும் நடிகர், இவர் இப்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் தீபாவளிக்கு வருமா என்று ரசிகர்கள் தெரியாமல் முலித்து வருகின்றனர், இந்த நிலையில் அஜித் குறித்து சூப்பர் தகவல் ஒன்றை பிரபல நடிகர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கொடிக்கட்டி பறப்பவர் ராதா ரவி இவர் தற்போது விஜய்க்கு வில்லனாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
இதில் இவர் அரசியல்வாதியாக நடிக்கின்றார், இதுமட்டுமின்றி சமீபத்தில் அஜித் குறித்து ஒரு சூப்பர் சுவாரஸ்ய தகவலை ராதாரவி கூறியுள்ளார்.
அஜித் எப்போதும் எல்லோருக்கும் ஓடி வந்து உதவக்கூடியவர், வெரி சிம்ப்ளிசிட்டி மேன் என்று அஜித்தை ராதா ரவி புகழ்ந்துள்ளார்.
அதோடு அஜித் தன் சொந்த காசில் 5000 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் என்று ராதாரவி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.