ஒரே தல அஜித் தான், தோனி எல்லாம் ஒன்னுமே இல்லை, சர்ச்சையை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்

அஜித் தான் தமிழகத்தில் பலராலும் தல என்று அறியப்பட்டவர், அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

அதே சமயம் கிரிக்கெட் சாம்பியன் டோனியை கூட தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இதனால் அடிக்கடி சில ரசிகர்கள் தல நா டோனி தான் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இன்று பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவருடைய செல்பி வீடியோவில், நான் எப்போதும் நம்புவது தல என்றால் ஒருத்தர் தான், நான் அவருடைய தீவிர ரசிகரும் கூட, நிறைய போஸ்டரில் தல என்று பெயரில் டோனி இருப்பார், ஆனால் எல்லாருக்கும் தெரியும் தல நா அஜித் அண்ணா மட்டும் தான் என்று கூறினார்.