சூப்பர் ஸ்டார் ஆகும் வாய்ப்பை தவறவிட்ட அஜித்- ரசிகர்கள் சோகம்

அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர், இவர் படங்கள் எப்போது வரும் என பல திரையரங்குகள் காத்திருக்கின்றது.

அப்படியிருக்க அஜித் தொடர்ந்து தற்போது ஒரே மாதிரி படங்களில் தான் நடித்து வருகின்றார், இது அவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் சலிப்பை தான் தட்டியுள்ளது.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு ரஜினி நடிப்பில் எந்திரன் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது, இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடிகள் வரை வசூல் செய்தது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிக்கு வட இந்தியாவில் மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது இப்படம்.

ஆனால், இப்படம் முதலில் அஜித், ஷாருக்கான் ஆகிய நடிகர்களிடம் தான் சென்றதாம், ஷாருக்கான் கதையில் சில மாற்ற கொண்டுவர சொல்ல ஷங்கர் அதிலிருந்து விலகினார்.

அதே நேரத்தில் அஜித் ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று தெரியவில்லை, அப்படி நடித்திருந்தால் அஜித் என்றோ சூப்பர் ஸ்டார் இடத்திற்கு வந்திருப்பார்.

அஜித் ஆஞ்சனேயா படத்தின் போது நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.