தன் நண்பர் ஒருவரால் மனமுடைந்து போன அஜித்

அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர், இவர் எப்போதும் எந்த விதமான ஆடம்பர விளம்பரங்களை விரும்ப மாட்டார்.

இந்த நிலையில் அஜித் தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பிற்காக ரெடியாகிவருகின்றார், அந்த கேப்பில் ஏரோ மாடலிங்கும் படித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் மிகவும் மனமுடைந்து காணப்படுகின்றாராம், என்ன என்று விசாரித்தால் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் செய்த செயலால் தான் இப்படியாம்.
அஜித்தின் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் பேட்மிட்டன் போட்டி ஒன்றை நடத்தினாராம்.

அந்த போட்டியில் பல கோடி நஷ்டமாம், இதன் காரணமாக அவர் தற்போது வரை தலைமறைவாக தான் இருக்கின்றாராம்.

இதனால் அவரை எப்படியாவது கண்டுப்பிடியுங்கள் என்று அஜித் தன் மற்ற நண்பர்களிடம் கூறி வருவதாக கூறப்படுகின்றது.