18 வருடம் கழித்து பிரபல நடிகரை அதிர்ச்சியில் ஆழ்த்திய அஜித்

அஜித் தனக்கென்று லட்சக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர், இவருக்கு என்று எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு ரசிகர்கள் கூட்டம்.

அஜித்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர், சிம்புவில் ஆரம்பித்து அட்டக்கத்தி தினேஷ் வரை இவருடைய தீவிர ரசிகர்கள் தான்.

இந்நிலையில் மலையாளத்தில் கலக்கும் இயக்குனர், நடிகர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்ட வினித் ஸ்ரீனிவாசன் தீவிர அஜித் ரசிகர்.

அவர் எப்படியாவது அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என காத்திருக்க, நேற்று அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதோடு இது ஒரு ரசிகனின் கொண்டாட்ட மனநிலை, மேலும் 18 வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன், ஆனால், அவர் கடைசியாக சந்தித்ததை கூட நினைவில் வைத்து அஜித் கேட்க தான் இன்ப அதிர்ச்சி ஆனதாக வினித் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.