பிரபல நடிகரின் மகனுக்கு போன் செய்து அதிர்ச்சியாக்கிய அஜித்

அஜித் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர், இவர் இப்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்ட்ரைக் காரணமாக கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு தொடங்காமலேயே தாமதமாகி வருகின்றது.

எப்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இந்த நிலையில் அஜித் செய்த காரியம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது, அந்த வகையில் சமீப காலமாக பல படங்களில் கலக்கி வருபவர் ப்ரேம். விக்ரம் வேதா படத்தில் மாதவன் நண்பராக நடித்து அசத்தினார்.

இவர் அஜித் வீரம் படப்பிடிப்பில் இருந்த போது அருகில் தான் இருந்துள்ளார், அஜித் அவரை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அப்போது தன் மகன் உங்கள் ரசிகன் என சொல்ல, உடனே போன் செய்து அவருடைய மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதனால், ப்ரேமின் மகன் அன்று இரவு முழுவதும் தூங்க கூட இல்லையாம், அத்தனை சந்தோஷத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.