நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ்.. மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தற்போது உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதை மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்ததால் தான் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதை அவரே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த செய்தி அமிதாப் பச்சனின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் நலம்பெற்று வீடுதிரும்ப வேண்டும் என ட்விட்டரில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அமிதாப் பச்சன் கடைசியாக குலபோ சித்தாபோ என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து அவர் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 12வது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். கொரோனா காரணமாக அந்த நிகழ்ச்சி இன்னும் துவங்காமல் உள்ளது.