Enga Veetu Mapillaiஆர்யா தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய், இவருக்கு ஈகோ என்பதே துளிக்கூட கிடையாது, யார் படம் என்றாலும் கெஸ்ட் ரோல் என்றால் நடித்துக்கொடுப்பார்.
இப்படி நல்ல பெயரை வைத்திருக்கும் ஆர்யாவிற்கு பெண்கள் மத்தியிலும் செம்ம மவுசு தான், அவருடன் நடித்த எல்லா ஹீரோயின்களும் மிகவும் மதிப்புடன் தான் அவரை பற்றி சொல்வார்கள்.
இந்த நிலையில் ஆர்யா நீண்ட வருடங்களாக திருமணம் செய்யாமல் இருக்கின்றா, அதன் காரணமாக பிரபல தொலைக்காட்சியின் சுயவரம் போன்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.
இதில் 16 போட்டியாளர்கள் ஆர்யாவை திருமணம் செய்ய போட்டி போட்டு வருகின்றனர், ஒவ்வொருத்தரும் ஏதாவது செய்து ஆர்யாவை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்கின்றனர்.
இலங்கை பெண் ஒருவர் விவாகரத்து ஆனவர் என்றாலும் அவருக்கு ஆர்யா மேல் ஒரு கரிசனை இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது.
இதை தாண்டி அப்ர்னதி என்ற கண்டஸ்ட் ஆர்யாவை முத்தமிட்டு பேச, இது மற்ற போட்டியாளர்களுக்கு பெரும் கோபத்தையும் வயித்தெறிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.