பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்.. ஓவியாவுடன் இல்லை! வருங்கால மனைவியின் புகைப்படம் இதோ

தமிழில் அதிகம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் டைட்டில் வென்றவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் ஆரவ் – ஓவியா காதல் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமின்றி ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் சர்ச்சையில் சிக்கியது.

நிகழ்ச்சிக்கு பிறகும் ஓவியா மற்றும் ஆரவ் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்று கூட அடிக்கடி தகவல்கள் வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என ஆரவ் பேட்டிகளில் கூறினார்.

இந்நிலையில் தற்போது ஆரவ்வுக்கு திருமணம் உறுதியாகி இருக்கிறது. வரும் செப்டம்பர் 6ம் தேதி நடக்கும் நிக்காவில் அவர் ஒரு பிரபல நடிகையை கரம் பிடிக்க உள்ளார்.

கெளதம் மேனனின் ஜோஷ்வா படத்தில் நடித்துள்ள Raahei என்ற நடிகையை ஆரவ் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது.