பிரபல காமெடி நடிகர் முனிஷ்காந்திற்கு திருமணம், எங்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் தான் ஓவர் நைட்டில் ஒபமா ஆவார்கள், அப்படி முண்டாசுப்பட்டி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் முனிஷ்காந்த்.

ஆனால், இந்த முன்னேற்றத்திற்கு பின்பு மிகப்பெரிய கடின உழைப்பு உள்ளது, முனிஷ்காந்த் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை எல்லாம் தூக்கி போட்டு தான் இந்த உயரத்தை தொட்டுள்ளார்.

இவர் முண்டாசுப்பட்டி, மாநகரம், பசங்க 2 என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். இதில் மாநகரம் படத்திற்காக இவர் சிறந்த காமெடியன் அவார்ட் எல்லாம் வாங்கினார்.

இவருக்கு இன்று சென்னை வடபழனி கோவிலில் திருமணம் நடந்துள்ளது, தேன்மொழி என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார்.

முனிஷ்காந்திற்கு திரையுலகத்தினர், ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, இந்த தம்பதியினர் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக்கொள்ளலாம்.