அப்பா ஆன காமெடியன் சதிஷ்.. குவியும் வாழ்த்து

தமிழ் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருப்பவர் சதிஷ். சிவகார்த்திகேயன், தளபதி விஜய் என பல முன்னணி நடிகர்கள் உடன் அவர் நடித்து இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சதிஷ் கொரோனா லாக் டவுன் போடப்பட்ட நேரத்தில் இருந்தே ட்விட்டரில் பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

எப்போதும் அவர் பதிவிடும் காமெடியான பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இன்று தான் அப்பாவான மகிழ்ச்சியான செய்தியை சதிஷ் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். தனக்கு மகள் பிறந்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.

“Dear friends and family, We blessed with a Girl baby. Need all ur blessings” என அவர் ட்விட் செய்துள்ளார். கடந்த வருடம் 2019ல் டிசம்பர் மாதம் 11ம் தேதி சதிஷ் – சிந்து திருமணம் நடைபெற்றது. சிக்ஸர் என்ற படத்தின் இயக்குனர் சச்சி-யின் தங்கை தான் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து கர்பமாக இருப்பதை இதுவரை அறிவிக்காமல் இருந்த சதிஷ், தற்போது பெண் குழந்தை பிறந்திருப்பதாக வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.