2004ல் பிரபல காமெடி நடிகர் சதீஷ் என்ன வேலை பார்த்தார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

சதீஷ் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்தவர். இவர் ட்ராமா ட்ரூப்பில் இருந்து படங்களுக்கு வந்தவர்.

அப்படி இன்று காமெடி நடிகர் என முன்னணி இடத்தில் இருக்கும் சதீஷ் அவர்களும் சினிமாவிற்கு வருவதற்கு பல விஷயங்கள் செய்திருக்கிறார். விடாத சிரிப்பு என்ற டெலி சீரியலிலும் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதை ஒரு ரசிகர் கவனித்து டுவிட்டரில் போட அதை சதீஷ் அவர்களும் ரீ-டுவிட் செய்துள்ளார்.