முனிஷ்காந்தின் திருமணத்தால் வந்த சோதனை, இப்படி ஆகிவிட்டதே

தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்பது ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொருத்தர் வந்து செல்வார்கள், அதில் நிலைத்து நின்றவர்கள் ஒரு சிலரே.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் காமெடியன் என்றால் முனிஷ்காந்த் தான், இவரின் மாநகரம், பசங்க 2 என அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

முன்னணி காமெடியனாக வளர்ந்து வரும் இவர் சினிமாவில் சாதிப்பதற்காக 40 வயதை தாண்டிய பின்பு சமீபத்தில் தான் திருமணம் செய்தார்.

இவர் திருமணத்தை பற்றி கூறுகையில், என்னுடைய மனைவியை பெண் பார்த்தபிறகு எந்த பதிலும் சொல்லாமல் இருந்தனர். திடிரென ஒருநாள் என் பிறந்ததேதியை பற்றி கேட்டபோது தான் தெரிந்தது அவர்கள் விக்கிபீடியாவை பார்த்து குழம்பியிருக்கின்றனர்.

அதில் எனக்கு 56 வயது என்றும் திருமணமாகி விவாகரத்தானவர் எனவும் இருக்கிறது. இதை எப்படி நீக்குவதென்று தெரியவில்லை. பின்னர் என்னுடைய பள்ளிச்சான்றிழை காட்டியபிறகு தான் நம்பினார்கள் என்றார்.