நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் காலமானார் – ரசிகர்கள் இரங்கல்

வசனத்திற்கு என்று தமிழ் சினிமாவில் தனி பாணி உருவாக்கியவர் கிரேஸி மோகன். அவர் ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார்.

இன்று கிரேஸி மோகன் அவர்களுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனே அவரை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் இன்று மதியம் இரண்டு மணி அளவில் கிரேஸி மோகன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.