பாரீஸில் தனுஷ் காட்டிய கெத்து, அசந்து போன ஹாலிவுட் நடிகர்கள்

தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் படமான The Extraordinary Journeyof The Fakir படம் ரிலிஸாகியுள்ளது.

இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று பாரீஸில் கிராண்ட் ரெக்ஸ் சினிமாவில் நடந்தது, தனுஷை பார்க்க பல தமிழ் மக்கள் வந்தனர்.

அப்போது தனுஷ் மேடைக்கு வர இப்படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் என அனைவருமே அசந்துபோய் விட்டனர். அந்த அளவிற்கு தனுஷிற்கு பிரமாண்ட வரவேற்பு அந்த மேடையில் கிடைத்தது.

அதை தொடர்ந்து தனுஷ் தமிழில் தான் பேசவேண்டும் என அன்பு கட்டளை வைக்க, தனுஷ் கையை உயர்த்தி சரி என்றார்.

மேலும் ஊதுங்கடா சங்கு பாடலை பாடி ரசிகர்களை இன்பத்தில் திளைக்கவிட்டார்.