கிரிஷ்டோபர் நோலனுடன் இணைந்த கமல்ஹாசன், ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர், அவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் காலத்தால் மறாவமல் இருப்பவை.

இவர் தற்போது சினிமாவில் நடிப்பதை விட்டு அரசியலில் களம் புகுந்துவிட்டார், இதனால், நான் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்று அவரே கூறிவிட்டார்,

நான் கடைசியாக நடிக்கபோகும் படம் இந்தியன் 2 தான் என்று அவர் தெரிவித்துல்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிரிஷ்டோபர் நோலனுக்கு தான்.

இவர் விரைவில் இந்தியா வரவுள்ளார், அப்போது அவர் இயக்கிய டன்கிர்க் திரைப்படம் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்யப்படவுள்ளது.

அது முடிந்த பிறகு நடிகர் கமல்ஹாசன், அமிதாப் பச்சனுடன் நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கலந்துரையாடல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுப்பதாக தான் இருக்கும், அதை தொடர்ந்து நோலன் இந்தியா முழுவதும் சுற்றுபயனம் வரவுள்ளாராம்.