பிரபல நடிகர் அஜித் மரணம்- ரசிகர்கள், திரையுலகத்தினர் அதிர்ச்சி

திரையுலகத்தில் சமீப காலமாக பல சோதனைகளை சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் தான் நடிகை ஸ்ரீதேவி இறப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது மலையாளத்தில் கலக்கி வந்த வில்லன் நடிகர் அஜித் உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார்.

இவர் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார், இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் உடல் இன்று மாலை கொள்ளம் உள்ள இவருடைய வீட்டிற்கு 6 மனிக்கு கொண்டு வரும் என கூறப்படுகின்றது.

இவர் மலையாளத்தில் மட்டுமே சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன் லால் என பலரும் அவரின் குடும்பத்திற்கு தன் இரங்கலை தெரிவித்துள்ளனர்.