பிரபல சேனலை நேருக்கு நேராக கிழித்து தொங்கவிட்ட மன்சூர் அலிகான்

மன்சூர் அலிகான் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். மக்களுக்காக எந்த ஒரு விஷத்திலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர்.

அதிலும் நீட், ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லாம் வெளிப்படையாக அனைத்து தொலைக்காட்சியையும் எதிர்த்து பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நேற்று நடிகர்கள் காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டைர்லைட்டிற்காக மௌனப்போராட்டம் நடத்தினர், அப்போது அதில் கலந்துக்கொண்டு மன்சூர் அலிகான் கடைசி வரை நின்றார்.

மௌனப்போராட்டம் முடிந்து இவர் வெளியே வரும் போது பத்திரிகையாளர்கள் இவரை சூழ்ந்துக்கொண்டனர்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் நேற்று ஒரு பேட்டியில் பேசுகையில் என்னிடம் ஸ்டைர்லைட், காவேரி மேலாண்மை பற்றி கேட்கிறீர்கள்.

ஏன், உங்கள் சேனல் தந்தி டிவி மத்திய அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு செயல்படவில்லையா?, அது எல்லோருக்கும் தெரியும் என்று அவர்களை நேருக்கு நேராக வைத்துக்கொண்டே மன்சூர் அலிகான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.