இப்படி ஒரு மெகா ஹிட் படத்தை விஜய் தவறவிட்டாரா!!

விஜய் படங்கள் என்றாலே மினிமம் கேரண்டி தான், அவரை நம்பி எந்த ஒரு தயாரிப்பாளரும் எத்தனை கோடி வேனுமானாலும் கொடுப்பார்கள்.

ஏனெனில் படம் போட்ட பணத்தை விட எப்படியும் லாபம் கொடுத்துவிடும், அதை விட முதலுக்கு மோசமிருக்காது, அதனால் தான் தயாரிப்பாளரின் பேவரட் விஜய் தான்.

சமீபத்தில் வந்த மெர்சல் கூட பல கோடி போட்டு எடுத்தாலும் 250 கோடி வசூல் செய்து பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் கொடுத்தது.

விஜய் தன் ஆரம்பக்காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார், அந்த சமயத்தில் பல ஹிட் படங்களை விஜய் தவறவிட்டுள்ளார்.

அதில் ஒன்று தான் லிங்குசாமி இயக்கிய ரன் தான், இப்படம் முதலில் விஜய்காக தான் எழுதப்பட்டதாம்.

அவரின் கால்ஷிட் பிரச்சனையால் பேச்சு வார்த்தையிலேயே இப்படம் மாதவன் கைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

ரன் படம் திரைக்கு வந்து 200 நாட்கள் வரை ஓடி மெகா ஹிட் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.