சிம்பு பெயரை கெடுக்க சதிவேலை, வெளிவந்த உண்மை தகவல்

தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது சிம்பு தான். அப்படி மனதில் பட்டைதை வெளிப்படையாக தைரியமாகவும் பேசுபவர் அவர்.

இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகானுக்காக கூட குரல் கொடுத்தார்.

அப்போது பல மீடியாக்கள் ‘தண்ணீர் கொடுக்க சொன்னீர்களே, காவேரி திறக்கப்பட்டதா?’ என்று கேட்டு நச்சரித்தனர்.

அதற்கு சிம்பு ஒரு பதில் கூறினார், அதை ஒரு ஊடகம் ‘எனக்கு மத்திய அரசும் தெரியாது, மாநில அரசும் தெரியாது’ என்று வெளியிட்டுள்ளது.

ஆனால், உண்மையாகவே சிம்பு கூறியது என்னவென்றால் ‘மத்திய அரசு பற்றியோ, மாநில அரசு பற்றியோ இப்ப பேச வேண்டிய அவசியம் இல்ல.

உங்க கேள்விக்கு அதைவிட தெளிவா எனக்கு பதில் சொல்ல தெரியும். ஆனால் எனக்கு தெரியாதுன்னே கூட வச்சுக்கோங்க. இப்ப நமக்கு ஆக வேண்டிய காரியம், மன்சூரலிகானை வெளியில் கொண்டு வருவது தான்’ என்பது தானாம்.