நடிகர் பொன்னம்பலத்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! கமல்ஹாசன் செய்த உதவி

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம். அவர் சினிமா துறையில் சண்டை கலைஞராக பின்னணியில் நடிப்பவராக வந்து அதற்கு பிறகு வில்லன் நடிகராக கலக்கியவர். அவரது உடன் தோற்றம் மட்டுமின்றி அவரது முகத்தில் இருக்கும் ரியாக்ஷன்களும் அவரை வில்லன் ரோல்களுக்கு கச்சிதமாக பொருந்தியது.

சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் பொன்னம்பலம் பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்கு பிறகு தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சிகிச்சைக்கு திரு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார் கமல். மேலும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினையும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.