விஜய் ரசிகர்கள் மீது போலிஸில் புகார்! பிரபல நடிகர் எடுத்த அதிரடி

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர், இவர் கை அசைத்தால் எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

வெளியே விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதேபோல் தான் இனையத்திலும், ஆனால் இனையத்தில் ஒரு சில நேரங்களில் வரம்பு மீறி செயல்படுகின்றனர்.

ஏற்கனவே ஒரு பெண் பத்திரிகையாளர்களை விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக பேசிய காரணத்தால் ஒரு ரசிகர் மிகவும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின் அவர் மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை முடிந்தது, இதை தொடர்ந்து நடிகர் கருணாகரன் விஜய் ஸ்ட்ரைக்கை பொருட்படுத்தாமல் ஷுட்டிங் சென்றதை விமர்சித்தார்.

அதற்கு பல ரசிகர்கள் அவரை மிகவும் மோசமான வார்த்தைகளால் அர்ச்சைனை செய்ய கருணாகரன் கோபமாகிவிடார்.

தற்போது அவர் “நடிகர்களின் படத்தை ப்ரொபைல் படமாக வைத்துக்கொண்டு தொடர்ந்து அவதூறாக பேசிவருவதை இதுவரை பொறுத்துக்கொண்டேன். இனி முடியாது. விரைவில் அதிகாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளேன்” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.