விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்தும் ராதாரவி

தளபதி விஜய் எப்போதுமே ஒரு படத்தில் கமிட் ஆகும் வரை தான் யோசிப்பார், கமிட் ஆகிவிட்டால் தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து நடிப்பார்.

அந்த வகையில் விஜய் தற்போதெல்லாம் நிறைய சோசியல் மெசெஜ் உள்ள படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், துப்பாக்கி, கத்தி, தெறி ,மெர்சல் வரை ஏதாவது ஒரு கருத்து இருந்தால் தான் நடிக்க சம்மதிக்கின்றார்.

தற்போது இவர் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

இதில் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார்.

இப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.

என்னை மீறி அவர் வருவார் என்பது போல் அவர் பேச அதை வைத்து படம் மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் கதை என கூறிவிட்டனர்.

இது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.