என் ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்! அரசியல் கட்சி பற்றி சூப்பர்ஸ்டார் அதிரடி அறிவிப்பு

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு நுழைவதாக அறிவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர் கட்சி துவங்கவே இல்லை.
மேலும் நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் நேரடியாக யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

அது பற்றி இன்று ரஜினி செய்தியாளர்களை சந்தித்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அவர்களுடைய ஆர்வம் புரிகிறது. அவர்களை ஏமாற்றமாட்டேன். எப்போது சட்டப்பேரவை தேர்தல் வரப்போகிறதோ, அப்போது என் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்தத் தேர்தல் முடிவுகள் எல்லாம் முதலில் வரட்டும். அப்புறம் சொல்கிறேன்,” என ரஜினி கூறியுள்ளார்.