ரஜினி ரசிகர்கள் முட்டாள்கள்: பிரபல இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரது படங்கள் வெளியானால் தியேட்டர்கள் திருவிழா போல தான் இருக்கும்.

இந்நிலையில் ரஜினி தன் ரசிகர்களை இன்னும் முட்டாள்களாகவே வைத்துள்ளார் என இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார். இருப்பினும் அவர் ரஜினியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசினார்.

நேற்று ஒரு இசை வெளியிட்டு விழாவில் பேசிய அவர் “பாலாபிஷேகம் பண்ணும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்கணும். ‘கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாகப் படம் பார் என சொல்லியிருந்தால் அவன் திருந்தியிருப்பான்.”
“இவ்ளோ நாள் முட்டாளா வச்சிருந்து.. இப்போ ‘நான் அரசியலுக்கு வரேன்’ னு சொன்ன ‘வா வா..’ னு தான் ரசிகன் கூப்பிடுவான்” என பாரதிராஜா கூறியுள்ளார்.