ரஜினி அரசியல் வேண்டாம், ஆசிரமம் ஆரம்பிங்க.. நானும் வரேன்! பிரபல நடிகர் பேச்சு

கூடிய விரைவில் அரசியல் கட்சி துவங்கிவிடுவேன் என அறிவித்துள்ள ரஜினிகாந்திற்கு அரசியல் காலத்தில் பெரும்பாலும் எதிர்ப்பு குரல்களே வருகிறது.

அவர் எது பேசினாலும் சர்ச்சையில் முடிந்துவிடுகிறது. இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் ராதாரவி ரஜினிக்கு அரசியல் செய்ய தெரியவில்லை என விமர்சித்துள்ளார். அதற்கு பதிலாக அவர் ஆசிரமம் ஆரம்பிக்கலாம் என கிண்டலாக கூறியுள்ளார்.

“ரஜினிக்கு அரசியல் தெரியலை. மத்தபடி, கிரௌடே இல்லாத ஒரு ரூம்ல உட்கார்ந்து அவர் போதனைகள் பண்ணலாம். ஆசிரமம் ஆரம்பிக்கலாம். நான் இதை காமெடியாவோ, காட்டமான விமர்சனமாவோ சொல்லலை. ஆசிரமம் ஆரம்பிச்சா, நான் அவர் கால்ல விழுந்து சரண்டர் ஆகி, அவருக்குப் பக்தகோடி ஆயிடுவேன்,” என ராதாரவி நேரடியாகவே ரஜினியை தாக்கி பேசியுள்ளார்.

ஆஷ்ரம் என்ற பெயரில் ரஜினி பள்ளி நடத்திவருகிறார் என்பது கூடுதல் தகவல்.