நான் பிக்பாஸ் 3 வீட்டுக்கு போகிறேனா? பரவிய செய்தி பற்றி பிரபல நடிகர் விளக்கம்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுளள்து. முதல் இரண்டு பகுதிகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இதையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

மேலும் தற்போது போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றியும் சில செய்திகள் உலா வருகிறது. அதில் பிரபல காமெடி நடிகர் ரமேஷ் திலக்கின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

அதை பார்த்த அவர் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். “அது வெறும் வதந்திதான். நான் பங்கேற்கவில்லை”  என அவர் வீடியோவில் கூறியுள்ளார்.