பிரபல சின்னத்திரை நடிகர் ராஜசேகர் காலமானார்! ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா இயக்குனரும் நடிகரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.

அவர் விஜய்டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அறியப்பட்டவர். அவர் ஆரம்பத்தில் ராபர்ட் என்பவருடன் சேர்ந்து பாலைவனச்சோலை உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். அதன் பிறகு சின்னப்பூவே மெல்லப்பேசு போன்ற படங்களை சோலோவாக இயக்கியவர் ராஜசேகர். நடிகராக சில படங்களில் நடித்து ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார் அவர்.

ராஜசேகரின் மரணத்திற்கு பல சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.