ரங்கராஜ் பாண்டேவின் வாயை அடைத்த சிம்பு- மிரட்டல் பேட்டி

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். கர்நாடகாவில் உள்ள மக்கள் அனைவரிடத்திலும் சிம்பு ஒரு கோரிக்கையை முன் வைத்தார்.

அது என்னவென்றால் உண்மையாகவே அரசியல் எண்ணம் இல்லாமல் தமிழர்களின் நலனுக்காக ஒரு டம்ளர் தண்ணீரை அவர்களுக்கு கொடுங்கள் என்றார்.

அதை தொடர்ந்து கர்நாடகா மக்கள் முழுவதும் தமிழர்களுக்காக தண்ணீர் கொடுத்தனர், இது பெரிய அளவில் ரீச் ஆனது.

சமீபத்தில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிம்புவை பேட்டி எடுக்கும் போது நீதிமன்றமே நமக்கு தண்ணீர் கொடுங்கள் என்று சொல்லியும், அதை கொடுக்க மறுக்கின்றது கர்நாடகா.

ஆனால், நீங்கள் ஏன் கெஞ்சி கேட்கவேண்டும் என்பது போல் பாண்டே கேட்க, அதற்கு சிம்பு அண்ணே, கர்நாடகா மக்கள் அனைவரிடமும் ஒரு மனநிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர்.

அதாவது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்காத கட்சிக்கு தான் நம் ஓட்டு என்ற மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்துவிட்டனர்.

அதை நாம் முதலில் உடைக்க வேண்டும், அதற்காக தான் அப்படி ஒரு விஷயத்தை சொன்னேன் என்று கூறி பாண்டேவையே அசர வைத்துவிட்டார்.

மேலும், இதுக்குறித்து ரஜினியோ, கமலோ பேசினால் அதை வேறு திசையில் உருட்டி அரசியல் ஆக்கிவிடுவீர்கள், அதனால் அவர்கள் பேச மறுக்கின்றார்கள்.

அதே நேரத்தில் மௌனப்போராட்டம் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை, பேசுபவர்கள் பேசலாம் என்று கூறியிருக்க வேண்டும் என்று சிம்பு பேசியுள்ளார்.