சிம்புவிற்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதை, இதுதாண்டா வளர்ச்சி, ரசிகர்கள் சந்தோஷம்

சிம்பு என்றாலே பலரும் வம்பு என்பார்கள், ஆனால், சிம்பு தன்னால் முடிந்த உதவியை பலருக்கும் செய்து வருகின்றார், அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

சரி அதை விடுங்கள் கர்நாடகா பிரச்சனையில் சிம்பு சொன்னது போல் சிலர் தண்ணீர் கொடுத்து தமிழர்களுக்காக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்நிலையில் சிம்புவை கன்னட சினிமாவில் பாட அழைத்துள்ளார்களாம்.

காந்த் ராஜ் இயக்கும் இப்படத்தில் இசையமைக்கும் ஸ்ரீதர் அண்மையில் சென்னை வந்து சிம்புவை சந்தித்து சம்மதம் வாங்கிவிட்டாராம். இப்பாடலின் ரெக்கார்டிங்க்காக சிம்பு பெங்களூரு செல்லயிருக்கிறாராம்.

இப்படத்தில் திலக், காதல் சொல்ல வந்தேன் மேக்னா ராஜ், அக்யுத் குமார் ஆகியோர் நடிக்கிறார்களாம்.

இது சிம்புவுக்கு கிடைத்த பெரும் வெற்றி என மொத்த ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்..