காவேரி சர்ச்சை நீடிக்கும் நிலையில் சிம்பு இப்படி செய்யலாமா..

காவேரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு சமீபத்தில் சொன்ன ஒரு கருத்து கன்னட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சிம்பு தற்போது இருவூடெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளது.

சிம்பு ஏற்கனவே தமிழில் டஜன் கணக்கில் பாடல்கள் பாடியிருந்தாலும் இந்த சர்ச்சையான நேரத்தில் கன்னட படத்தில் பணியாற்றியிருப்பது தமிழ் சினிமா துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.