சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தன் படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் சிவகார்த்திகேயன் கொஞ்சம் எமோஷ்னல் டைப் என்பது அனைவரும் அறிந்ததே.
நான் சம்பாதித்து என் அப்பாவிற்கு எதுவுமே வாங்கி கொடுத்ததில்லை என சிவகார்த்திகேயன் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு விருது விழாவில் அப்பா பற்றி பேசிவிட்டு அவர் கண்ணீர் விட்டது அனைவரையும் உருகியது.
அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் ஓவியமாக வரைந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்து எமோஷனலான சிவா, அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம் கூட எடுக்கவில்லை, இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் மிகவுன் உணர்ச்சி வசப்பட்டு தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே… என்ற வரியையும் பதிவு செய்தார்.

I don know how to thank u 🙏 feeling very happy and emotional.. its been sad for me that i missed to take a good pic with appa..this one wil be very spl.. thanks again ma😊 தெய்வங்கள் எல்லாம் தோற்றேப்போகும் தந்தை அன்பின் முன்னே… https://t.co/mOPFijt9oG
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 14, 2018