அப்போது தூத்துக்குடி வேண்டும், இப்போது வேண்டாமா தல – ரசிகர்கள் கோபம்

அஜித் தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர். அதிலும் தென் மாவட்டங்களில் அஜித்திற்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் அஜித் அட்டகாசம் படத்தில் தூத்துக்குடி இளைஞனாக நடித்திருப்பார், அதில் சோற்றுக்கு உப்பு அங்கிருந்து தான் வருகிறது என்பார்.

அப்படியிருக்க தூத்துக்குடியே பற்றி எரியும் போது தல அமைதியாகவே இருப்பது ரசிகர்களுக்கே கோபம் தான்.

என்ன தல எல்லாத்துக்கும் அமைதியா இருப்பது நியாயம் தான், ஆனால் எங்கள் துக்கத்திலாவது நீங்கள் பங்கெடுக்க வேண்டாமா என்று ரசிகர்களே கேள்வி எழுப்பி வருகின்றனர்.