IPL போட்டியில் காவேரிக்காக தோனி இதை செய்ய வேண்டும்- சூப்பர் ஸ்டார் அதிரடி கட்டளை

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் தன்னை தமிழர் என்று சொன்னாலும், பலரும் ரஜினியை கர்நாடகாவை சேர்ந்தவர் என்றே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்கம் நடத்தும் காவேரிக்கு ஆதரவான மௌன போராட்டத்தில் ரஜினி கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது அவர் கலந்துக்கொள்வதற்கு முன் பேசுகையில் பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை, மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும், ரசிகர்களும் அதை தான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி காவிரிக்காக தமிழகமே போராடும் போது, ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லதுதான்

பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனாலும் உலகம் அழிந்துவிடும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார்.