தல அஜித்தின் பேவரட் ஐபிஎல் டீம் இது தான், தோனியை பிடிக்குமா? அவரே பேட்டியில் சொன்னார்

அஜித் பேட்டி கொடுப்பது என்பது அரிதிலும் அரிது. அவர் பேட்டிக்காக பல தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றது, ஆனால், அவரோ திரையில் மட்டுமே தன் முகத்தை காட்டுபவர்.

இந்த நிலையில் ஐபிஎல் மேட்ச் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றது, இதில் தங்களுக்கு பிடித்த வீரர்களின் டீமிற்கு ரசிகர்கள் சப்போர்ட் செய்வார்கள்.

அந்த வகையில் அஜித் ஐபிஎல் டீம் குறித்து சில வருடங்களுக்கு முன் பேசியுள்ளார். ஆம், அதில் சிஎஸ்கே டீம் எனக்கு மிகவும் பிடிக்கும், என்னால் அனைத்து போட்டிகளையும் பார்க்க முடியாது, ஆனால், அவ்வபோது தெரிந்து வைத்துக்கொள்வேன்.

கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லும் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது அசல் படம் வந்த போது அஜித் கொடுத்த பேட்டியில் வந்தது.

அதேபோல் தோனியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார், அவரின் கேப்டன்ஷி மிகவும் திறமை வாய்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியோ சினிமா தலக்கு கிரிக்கெட் தலயை பிடிப்பதில் பெரிதும் ஆச்சரியமில்லை.