அஜித் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அந்த அன்பினால் தான் அவர்கள் படம் பேனர், போஸ்டர், அரசியல் என்று நேரத்தை வீனடிப்பதை அறிந்து மன்றத்தை கலைத்தார்.
அஜித்தை எப்போதும் பேட்டிகளில் பார்ப்பது அறிதிலும் அறிது, அவரை திரையில் மட்டுமே பார்க்க முடியும், எந்த ஒரு ப்ரோமோஷனையும் விரும்பாதவர் அஜித்.
அந்த வகையில் அதிலும் பில்லா படத்திற்கு பிறகு இவரை எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை, தன் வேலை நடிப்பது, அதை மட்டும் பார்க்கின்றேன் என இருந்துவிட்டார்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார், அதில் மற்ற நடிகர் ரசிகர்களுடன் உங்கள் ரசிகர்கள் சண்டைப்போடுகிறார்களே என்று கேட்டனர்.
அதற்கு அஜித் என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்ற நடிகர்களை கிண்டல் செய்வதோ, மோசமாக விமர்சிப்பதோ செய்யாதீர்கள், அவர்கள் ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ளார்