பிரபல நடிகர் நீலகண்டன் மரணம் – சினிமா துறையினர் அதிர்ச்சி

பல திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்த பழம்பெரும் நடிகர் நீலு என்கிற நீலகண்டன் நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.

உடல்நல பிரச்சனையால் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சென்னையில் மரணமடைந்தார்.

தீனா, அந்நியன், ரெண்டு, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.