விஜய் எப்போதும் மிகவும் அமைதியானவர் என்று தான் கூறுவார்கள். ஆனால், அவருடைய நண்பர் வட்டாரத்தில் விஜய் எப்போதும் செம்ம கலாட்டா செய்வாராம்.
அப்படித்தான் நண்பன் படம் வந்த போது ஜீவா, ஸ்ரீகாந்துடன் விஜய் அடிக்காத லூட்டியே இல்லையாம்.
நண்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் அதே எனர்ஜியுடன் தான் பேசினார், அப்போது ஒரு பத்திரிகையாளர் எப்போது ஹிந்தி படங்களில் நடிக்கப்போகிறீர்கள்? என கேட்டனர்.
அதற்கு விஜய் ஏங்க நல்ல தானே போய்ட்டு இருக்கு என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்ல, அரங்கமே கலகலப்பானது.
இதோடு இதே படத்தில் லிப்-லாக் முத்தக்காட்சியிலும் நடித்தீர்களே அதுப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார்.
அதற்கு அவர் “ஏங்க படத்திற்கு அந்த காட்சி தேவை அதனால் நடித்தேன், அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் கூட அந்த காட்சி உள்ளது அதற்காகவே வைத்தார்கள்” என கொஞ்சம் பதட்டத்துடனே கூறினார்.