முன்னணி நடிகையை மனம் திறந்து பாராட்டிய தளபதி விஜய்

விஜய் எப்போது யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவுபவர். அதே நேரத்தில் நல்ல படங்களையும் நன்றாக நடித்த நடிகர், நடிகைகளையும் எந்த ஒரு ஈகோ இல்லாமல் பாராட்டுபவர்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நடிகையர் திலகம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் பிரபலங்கள் பலரும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

மேலும் தற்போது கீர்த்தி சுரேஷ் தளபதி 62 படத்தில் நடித்துவருகிறார். தற்போது சென்னையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவகிறது.

நடிகையர் திலகம் படத்தை பார்த்த விஜய் கீர்த்தி சுரேஷை படப்பிடிப்பு தளத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார்.