தளபதி விஜய் சமூகத்தில் என்ன நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர், அந்த வகையில் விஜய் நேற்று துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
பகலில் சென்றால் கூட்டம் கூடும் என இரவில் பைக்கில் தூத்துக்குடி சென்ற விஜய், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 1 லட்ச ருபாய் பணமும் கொடுத்துள்ளார்.
மேலும் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து நலம் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நண்பரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தளபதி 🙏🙏🙏 @actorvijay ❤ pic.twitter.com/06LclWKhS1
— Vijay Team Online (@VijayTeamOnline) June 6, 2018