அசிங்கப்பட்ட விஜய், அட்டைப்படத்தில் வந்த கதை- அவமானத்தை கடந்து சாதனை செய்த தளபதி

விஜய் தமிழ் சினிமாவில் இன்று கொடிக்கட்டி பறக்கும் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் எந்த ஒரு படம் வந்தாலும் மிமிமம் கேரண்டி தான்.

அதிலும் கடைசியாக வந்த மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, சுமார் 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது.

இந்த நிலையில் விஜய் நடிக்க வந்த போது இவரை கிண்டல் செய்யாதவர்களே இல்லை, எங்கு திரும்பினாலும் ;இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க வந்துவிட்டதா.

அப்பாவிடம் காசு இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நடிக்க வந்துவிடலாம் என்று கூறினார்கள், இதை மக்கள் மட்டும் கூறவில்லைம்.

தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று இப்படி தெரிவித்தது, ஆனால் விஜய் எந்த ஒரு இடத்திலும் கலங்கவில்லை.

தன்னால் முடிந்த உழைப்பை தந்துக்கொண்டே தான் இருந்தார், அப்படி இவர் கடுமையான உழைப்பால் தான் இன்று ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

அதே நேரத்தில் தற்போது அதே வார இதழ் தான் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்து அவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் போட்டு வியாபாரம் செய்தது.

இது தாங்க தளபதியின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் தன்னை கிண்டல் செய்தவர்கள் அனைவருக்கும் தன் உழைப்பால் கொடுத்த பதிலடி.