தளபதி விஜய் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை உடையவர், இவர் கை அசைத்தால் இவருக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.
விஜய் இப்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படம் சமுகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் என கூறப்படுகின்றது.
விஜய் தன் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார், அதை தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு பல உதவிகளை செய்து வருகின்றார்களாம்.
அதில் ஒரு ரசிகர் கூறுகையில் விஜய் எங்களை மதிப்பதே இல்லை, என் திருமணத்திற்கு அழைத்த போது கூட அவர் வரவில்லை.
இதை கேட்டால் நீ முன்பே கூறியிருக்க வேண்டும் என்கின்றார்கள், அது மட்டுமின்றி விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதால் அதற்கான பணத்தொகையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்பது போல் சொல்கின்றார்கள்.
மேலும், எஸ்.ஏ.சி அவர்களை இனி என்னை அப்பா என்று தான் அழைக்க வேண்டும் என்கின்றார், கஷ்டப்பட்டு பேனர், போஸ்டர் அடித்த எங்களுக்கு மரியாதை இங்கு இல்லை’ என்பது போல் அவர் பேசியுள்ளார்.