விஜய் சொன்ன குட்டி கதை.. வாரிசு மேடையில் தளபதியின் மாஸ் ஸ்பீச்! முழு விவரம்

Vijay full speech in Varisu Audio Launch

வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசினார்.. முழு விவரம் இதோ..

Vijay at Varisu Audio Launch

எனது அன்பான நண்பா, நண்பிகள். வந்திருக்கும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம். நம்ம போற பயணம் நிறைவாக இருக்கனும்னா.. நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியாக இருக்க வேண்டும். போற வழியில் அறிவை சேர்ந்துக்கொண்டே போகணும், அன்பை கொடுத்துக்கொண்டே போகணும், நட்பை கூட்டிட்டே போகணும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நன்றியை மட்டும் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி ஒரு நன்றியை சொல்லும் விழாவாக தான் இப்படி ஒரு மேடை. எனக்கு அவ்ளோ அன்பு கொடுத்திருக்கீங்க. இது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. என்னை உருவாக்கிய உளிகளுக்கு எனது நன்றிகளும் வணக்கங்களும்.

தயாரிப்பாளர் தில் ராஜு. அவர் தெலுங்கில் முதலில் distribute செய்த படம் தில், அதனால் தான் அவருக்கு இப்படி ஒரு பெயர். அவர் இங்கே நிறைய படம் தயாரிக்க போகிறீர்கள், அதனால் தான் நண்பர் சந்தானம் ‘தில்லுக்கு துட்டு’ என படம் எடுத்திருக்காரு. வாரிசுக்கு வாழ்த்துக்கள் சார். உங்களுக்கு பிறந்த வாரிசுக்கு சார்.

இயக்குனர் வம்சி அவர் எப்படி என்றால், அவர் சொல்லும் கதையை ஒரு முறை கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிடுவார்கள். ஆனால் செட்டில் அவர் ஒரே டேக்கில் எப்போவுமே ஓகே செய்ததில்லை. அந்த அளவுக்கு perfection எதிர்பார்ப்பார் என்று தான் சொன்னேன், வேறு எதுவும் இல்லை, தப்பா எடுத்துக்காதீங்க.

Family entertainer படம் எடுக்கலாம் என அவர் சொன்னார், எனக்கு நண்பா நண்பிகள் எல்லாருமே குடும்பம் தானே. உங்களுக்கும் சேத்து இந்த படத்தை present பண்ணிருக்காரு.

தமன் – பாட்டை போட சொன்ன fullஆ பீட்டாக போட்டு வெச்சிருக்காரு. அம்மா சாங் ரொம்ப ஸ்பெஷல்.

சரத்குமார் – வாரிசு வீட்டில் அவர் ஒரு நாட்டாமை.

ஜெயசுதா – இத்தனை வருஷம் கழிச்சும் அவர் நடிப்பை ரசிக்கிறார்கள் என்றார் அது சாதாரண விஷயம் அல்ல.

பிரபு சார் – பெரும்பாலான படங்களில் அவர் அப்பா, ஆனால் பழகி பாருங்க அவர் ஒரு குழந்தை.

Rashmika with Vijay

வில்லன் என்று சொன்னாலே பல பெயர் நினைவுக்கு வரும், ஆனால் செல்லம் என சொன்னால் நியாபகம் வருவது பிரகாஸ்ராஜ் தான். இந்த படத்திலும் காம்பினேஷன் ஒர்கவுட் ஆகும் என நினைக்கிறேன்.

ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் எனக்கு brothers ஆக நடித்து இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துவிட்டு எந்த ஈகோவும் பார்க்காமல் எனக்கு தம்பியாக நடித்து கொடுத்திருக்கிறார். ஷாம் குஷி டைமில் இருந்தே நல்ல நண்பர். ஒரு லன்ச், டின்னர்.. எதுவாக இருந்தாலும் ஷாம் இல்லாமல் எதுவம் நடக்காது.

யோகி பாபு- அவரும் ஹீரோ தான், ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என முயற்சித்தார், ஆனால் இப்போ பாருங்க அவரை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என மற்ற எல்லோரும் நினைகிறார்கள். அந்த வளர்ச்சி உண்மையிலேயே எனக்கு சந்தோசம்.

குஷ்பூ – அவரது முகத்தை பார்க்கும்போது எனக்கு சின்னத்தம்பி டேஸ் தான் நினைவுக்கு வரும். கமலா தியேட்டரில் அடிச்சுப்புடிச்சு டிக்கெட் வாங்கி அந்த படத்தை பார்த்தது. நண்பர்களுடன் பார்த்தது, கேர்ள் friendஐ கூட்டிட்டு போய் பார்த்தது தான் நினைவுக்கு வரும்.

எஸ்ஜே சூர்யா – அவருக்கும் screenspace கம்மி தான், ஆனால் அவரும் ஒப்புக்கொண்டு நடித்தது பெரிய விஷயம். நீங்க கிட்டத்தட்ட அந்த இடத்திற்கு வந்துடீங்க, நீங்க கண்ட கனவு 100% நிறைவேறபோகிறது.

குட்டி கதை..

இது உறவுகள் பற்றிய படம் என்பதால், அதை பற்றியே ஒரு குட்டி கதை..

ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருக்கிறார்கள். அப்பா வேலைக்கு சென்று வரும்போது இரண்டு சாக்லேட் வாங்கிவருவார். இரண்டு குழந்தைகளுக்கும் கொடுப்பார்.

தங்கை உடனே அதை சாப்பிட்டுவிடுவார். அண்ணன் அதை நாளை பள்ளிக்கு எடுத்துச்செல்லலாம் என ஒளித்து வைத்தால் அதன் பின் தங்கை அதையும் எடுத்து சாப்பிட்டுவிடுவார்.

ஒருநாள், அன்பு என்றால் என்ன என தங்கை அண்ணனை பார்த்து கேட்க, ‘நீ எடுத்து சாப்பிடுவ என தெரிந்தும் அதே இடத்தில் தினமும் சாக்லேட்டை ஒளித்து வைக்கிறேன்ல.. அது தான் அன்பு’ என கூறி இருக்கிறார்.

இப்படி நமக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் உறவுகள் மற்றும் எதற்காகவும் நம்மை விட்டுக்கொடுக்காத நண்பர்கள்.. இந்த இரண்டு அன்பு மட்டும் இருந்துவிட்டால்.. எல்லாம் முடிஞ்சு.

ரத்ததானம்..

மன்றத்தை சேர்ந்த நண்பர்கள் நிறைய ரத்ததானம் செய்கிறார்கள். அந்த ஆப் உருவாக நான் ஒரு முக்கிய காரணம். ரத்தத்த்துக்கு மட்டும் தான் எந்த வித்தியாசமும் இல்லை. ஏழை பணக்காரன், ஆண் பெண், எந்த மதத்தை சார்ந்தவர் என வித்யாசம் இல்லை.

நாம் தான் ஜாதி, மதம் என பிரிச்சி பாத்து வாழ்ந்துட்டு இருக்கோம், இந்த ஒரு qualityஐ நாம் ரத்தத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆப் தொடங்க இதுதான் முக்கிய காரணம், அதில் 6000 பேர் donors ஆக சேர்ந்திருக்கிறார்கள். எல்லாம் நம் நண்பர்கள் தான். இதற்க்கு முழு கிரெடிட்ஸ் மன்ற தலைவர் ஆனந்துக்கு தான்.