பிரபல நடிகரின் மகனுக்கு விஜய் செய்து வரும் பெரும் உதவி, இதுவரை வெளிவராத தகவல்

விஜய் தமிழ் குடும்பங்களில் பலரின் வீட்டில் தங்களில் ஒருவராக பார்க்கும் நபர், அந்த அளவிற்கு தமிழ் நெஞ்சங்கள் மனதை கொள்ளை கொண்ட கதாநாயகன் இவர்.

யாருக்கு எந்த உதவி என்றாலும் அலட்டிக்கொள்ளாமல் முதல் ஆளாக ஓடி வந்து உதவும் மனப்பான்மை கொண்டவர் தான் தளபதி.

இந்நிலையில் பிரபல நடிகர் மகன் நாசரின் மகன் ஃபைசல் ஒரு பெரும் விபத்தில் சிக்கினார், அது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்போது பைசலுடன் இருந்த அவரின் நண்பர் ஒருவர் கூட இறந்தார்.

இந்த நிகழ்வில் இருந்து பைசல் குணமாகி வர பல நாட்கள் ஆகிவிட்டது, நாசரும் சில நாட்கள் மனமுடைந்து காணப்பட்டார்.

அவர் தற்போது தான் மெல்ல குணமாகி வர, விஜய் வாரத்திற்கு மாதத்திற்கும் ஒரு முறையாவது அவரை சந்தித்து பேசிவிட்டு தான் வருவாராம்.

இவ்வளவும் பெரிய நாயகன் அடிக்கடி தன்னுடன் பேசுவது ஃபைசலுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.

என்ன தான் மருந்து, மாத்திரை என்றாலும் பிடித்தவர்கள் பேசினால், நோய் பாதி குறையும் என்பது போல் விஜய் தன் நேரத்தை ஒதுக்கி ஃபைசலுக்காக செலவிடுவது சந்தோஷமே.